தேசியம்
செய்திகள்

Alberta இருப்பதற்கு சிறந்த இடம் கனடா: Mark Carney

Alberta மாகாணத்திற்கு சிறந்த இடம் கனடா என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

மாகாணத்தில் பிரிவினைவாத மனுவை தள்ளுபடி செய்த நீதிபதியின் தீர்ப்பைத் தொடர்ந்து பிரதமரின் இந்தக் கருத்து வியாழக்கிழமை (14) வெளியானது.

பிரிவினைவாத முயற்சிக்கு உதவும் வகையில் முதல்வர் Danielle Smith அரசாங்கம் திருத்தங்களைச் செய்த ஒரு மாகாணச் சட்டத்தின் கீழ், பிரிவினை குறித்த பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க கூடாது என நீதிபதி Shaina Leonard புதன்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

இந்த விடயத்தில் முதல் குடியினருடன் கலந்தாலோசிக்க வேண்டிய தனது கடமையை Danielle Smith அரசாங்கம் புறக்கணித்துவிட்டது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

பொது வாக்கெடுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என கூறிய பிரதமர், விதிகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நீதிபதியின் தீர்ப்பை “ஜனநாயக விரோதமானது” என விமர்சித்த Danielle Smith, தனது அரசாங்கம் இதை மேல்முறையீடு செய்யும் என அறிவித்தார்.

இந்த மனுவின் பின்னணியில் உள்ள குழுவான Stay Free Alberta, நீதிபதி சட்டத்தில் தவறிழைத்து விட்டார் என கூறி, இதை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

நான்கு மாகாண, பிரதேசங்களின் இணையதளங்கள் செயலிழந்தன

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment