தேசியம்
செய்திகள்

போலி நிறுவனங்கள் மூலம் $1 இலட்சம் 407 நெடுஞ்சாலை கட்டணத்தை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!

Service Ontario மையங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, வாகன பதிவுகளை மேற்கொண்டு 407 ETR நெடுஞ்சாலை  கட்டணங்களை ஏமாற்றி வந்த மோசடி குழுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Peel பிராந்திய வணிக வாகன குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த கைது குறித்த விபரங்களை வியாழக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

Project Octane  என்ற பெயரில் கடந்த May மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் தமிழர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Ontario போக்குவரத்து அமைச்சகம் (MTO), 407 ETR நிர்வாகத்துடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி, இல்லாத நிறுவனங்களின் பெயர்களில் வாகன பதிவுகளை மேற்கொண்டு, சுமார் $100,000-க்கும் அதிகமான 407 ETR நெடுஞ்சாலை சுங்க கட்டணங்களை ஏமாற்றி வந்த  மோசடி கும்பலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டது.

இந்த விசாரணையின் முடிவில் மாகாண குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் 35 வயதான Brampton நகரை சேர்ந்த கஜன் கருணாநிதி, 31 வயதான Caledon நகரை சேர்ந்த Haroon Qayumzada, 52 வயதான MIlton நகரை சேர்ந்த Tariq Hameed, 37 வயதான Toronto நகரை சேர்ந்த Ismail Ismail கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, மோசடி கும்பலிடம் இருந்து மாற்று வாகன அடையாள எண்கள் (Re-vinned) பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த 10 ஆடம்பரத் திருட்டு வாகனங்களை காவல்துறையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட இந்த 10 வாகனங்களின் மொத்த மதிப்பு $750,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

பசுமைக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்கள் இருவர்

Lankathas Pathmanathan

Venezuela: அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment