British Colombia மாகாணத்தின் Kamloops பகுதிக்கு அருகிலுள்ள முதல் குடியின மக்களுக்குச் சொந்தமான வரலாற்றுப் பூமியில், வெள்ளை இன தேசியவாதிகள் போராட்டம் நடத்தியதற்காக அரசியல் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் Kamloops குடியிருப்பு பாடசாலை அமைந்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் அருகிலேயே இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது.
முதல் குடியின மக்களின் புனித தன்மையையும், அவர்கள் கடந்த காலத்தில் சந்தித்த துயரங்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தக் குழுவின் செயலை அசிங்கமான, அருவருப்பான நடத்தை என அரசியல் தலைவர்கள் சாடியுள்ளனர்.
British Colombia மாகாணத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இனவெறிச் செயலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
