Peel பிராந்தியத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகனத் திருட்டுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைந்துள்ளது.
புதிதாக வெளியான மாகாண அரச புதிய புள்ளி விவரங்கள் மூலம் இந்த தரவு வெளியானது.
திங்கட்கிழமை (28) காலை Peel பிராந்திய காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தரவுகளை மாகாண அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2026 January 1 முதல் June 30 வரையிலான காலப்பகுதியில் Peel பிராந்தியத்தில் மொத்தம் 2,790 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகின.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 3,089 திருட்டுகளை விட 299 வாகனங்கள் குறைவானதாகும்.
இது ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீத வீழ்ச்சியை குறிக்கிறது.
Ontario மாகாணம் முழுவதிலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் வாகன திருட்டுகள் 8.4 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 9,601 வாகனங்கள் திருடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8,796 ஆக அது சரிந்துள்ளது.
கனடா முழுவதும் கடந்த 2023-ஆம் ஆண்டில் உச்சத்தைத் தொட்ட வாகன திருட்டு குற்றங்கள் மத்திய, மாகாண அரசுகளின் கூட்டு நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
