Toronto மாநகர முதல்வர் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு குறைவான காலம் மாத்திரம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் Olivia Chow, Brad Bradford, Chris Alexander ஆகிய மூவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
வாழ்க்கைச் செலவினம், குற்றச் செயல்கள், பொதுப் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் ஆகிய மூன்று முக்கியப் பிரச்சனைகளை முன்வைத்து இந்தத் தேர்தல் களம் நகர்கிறது.
Toronto மாநகரத்தின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் October 26 அன்று நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான கால அட்டவணை October 13 ஆரம்பமாகி 18 வரை மொத்தம் 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
இந்தத் தேர்தலில் Toronto மாநகர முதல்வர் பதவிக்கு மொத்தம் 53 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
