September 22, 2026
தேசியம்
செய்திகள்

Belleville யூத வழிபாட்டு தல துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் மரணம்!

Belleville யூத வழிபாட்டு தலத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.

யூத சமூகத்தினர் தங்களின் புனித நாளான Yom Kippu வழிபாட்டிற்காக கூடியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நிகழ்ந்தது.

Sons of Jacob Synagogue யூத வழிபாட்டு தலத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தி, காவல்துறையினரால் சுடப்பட்ட சந்தேக நபரான Sean Ward மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் போது காவல்துறையினர் நடத்திய எதிர்ச் சூட்டில் படுகாயமடைந்த அவர், பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் மீட்கப்பட்ட Sean Ward, பின்னர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு திங்கட்கிழமை (21) இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் செவ்வாய்க்கிழமை,(22)  வெளியாகின.

உயிரிழந்தவரின் உடற்கூறாய்வும் பிரேத பரிசோதனையும் புதன்கிழமை (23) Kingston நகரில் நடைபெறவுள்ளதாக SIU உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியைக் கொண்டிருக்கலாம் எனச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) சந்தேகிக்கிறது.

இந்தத் தாக்குதலின் விதம் ஒரு பயங்கரவாத தாக்குதலின் விளக்கத்தோடு ஒத்துப்போவதை மறுப்பதற்கில்லை SIU செய்தித் தொடர்பாளர் Kristy Denette ஒப்புக் கொண்டுள்ளார்.

29 வயதான Sean Ward கனடிய ஆயுதப்படையின் முன்னாள் உறுப்பினர் என்ற தகவல் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால், மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) இந்த வழக்கின் முழு விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், பயங்கரவாதக் கோணத்திலான இந்த விசாரணை கனடா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்காவுக்கு கனடாவின் இருக்குமதிகள் தேவையில்லை: Donald Trump

Lankathas Pathmanathan

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல்?

Lankathas Pathmanathan

Leave a Comment