Scarborough மருத்துவமனை ஒன்றின் வாகன நிறுத்தத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் பலியாகினர்.
இதில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர், பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் தம்பதியர் என நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (21) மதியம் 12:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
Warden and St. Clair அருகில் அமைந்துள்ள Providence Healthcare மருத்துவமனை வளாகத்தின் வெளிப்புற வாகன நிறுத்தத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிக் குண்டுகளால் படுகாயமடைந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர்.
அவர்களுக்கு அவசர முதலுதவிகள் வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.
இதில் சந்தேக நபர்கள் எவரும் தேடப்படவில்லை.
Toronto காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.
