உலகின் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Toronto SickKids மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.
Newsweek செய்தி இதழ், Statista தரவு நிறுவனம் ஆகியவை இணைந்து உலகெங்கிலும் உள்ள 250 குழந்தை மருத்துவமனைகளை ஆய்வு செய்தது.
இதில் உலகிலேயே மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Toronto SickKids மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவு வியாழக்கிழமை (17) வெளியிடப்பட்டது.
மருத்துவமனைகளின் உலகளாவிய நற்பெயர், அங்கீகாரங்கள், நோயாளிகளின் நேரடி அனுபவ கருத்துக்கள் ஆகிய மூன்று முக்கிய தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளின் முன்னணி மருத்துவமனைகளை பின் தள்ளி Toronto SickKids மருத்துவமனை உலகளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இந்த அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள Toronto SickKids மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான Dr. Ronald Cohn, இதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவ ஊழியர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், கனடிய சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
இம்முறை உலகின் தலைசிறந்த 15 மருத்துவமனைகளின் பட்டியலில் கனடாவின் மேலும் இரண்டு குழந்தை மருத்துவமனைகள் இடம்பிடித்துள்ளன.
Vancouver நகரில் அமைந்துள்ள BC குழந்தைகள் மருத்துவமனை 9-ஆவது இடத்தையும், Calgary நகரில் அமைந்துள்ள Alberta குழந்தைகள் மருத்துவமனை 15-ஆவது இடத்தையும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
