ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணை உறுப்பினராக மாறுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை கனடா ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மைய மேடையில் Mark Carney வியாழக்கிழமை (17) உரையாற்றினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணை உறுப்பினராக மாறுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை தனது உரையில் முறைப்படி ஏற்றுக் கொண்டு Mark Carney வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த மேம்படுத்தப்பட்ட புதிய கூட்டாண்மை திட்டம் கனடாவின் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்கும் இறுதி வாக்களிப்பிற்கும் சமர்ப்பிக்கப்படும் என தனது உரையில் Mark Carney குறிப்பிட்டார்.
கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இக்கட்டான காலத்துக்கான தற்காலிகக் கூட்டாளிகள் அல்ல எனவும் Mark Carney கூறினார்.
கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு முழுநேர உறுப்பினராக இணையப் போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பாவுடனான இந்த ஆழமான கூட்டணி கனடாவை அமெரிக்காவிற்கு இன்னும் ஒரு மிகச் சிறந்த வர்த்தக கூட்டாளியாக மாற்றும் எனவும் Mar kCarney வாதாடினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான உறவை ஏற்படுத்துவதற்கான கனடிய பிரதமரின் முயற்சி, கனடா-அமெரிக்க எல்லைகளின் இருபுறமும் கடுமையான அரசியல் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.
Mark Carney கனடியர்களை ஏமாற்றுகிறார் என Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.
இந்த விடயத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவிப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அவர் கூறினார்.
அதேவேளை இது ஒரு பகைமை நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump எச்சரித்தார்.
கனடாவை ஒரு “மோசமான வர்த்தகக் கூட்டாளி” என மீண்டும் குற்றம் சாட்டிய Donald Trump, கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராவது வேடிக்கையானது என செய்தியாளர்களிடம் கூறினார்.
