September 16, 2026
தேசியம்
செய்திகள்

முதலீட்டு மாநாட்டுப் போராட்டத்தில் வன்முறை: காவல்துறையினரைத் தாக்கிய 2 பெண்கள் கைது!

கனடா முதலீட்டு மாநாட்டிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட இருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் Mark Carney ஏற்பாடு செய்த கனடா முதலீட்டு மாநாட்டிற்காக உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சொத்து மேலாளர்களும் வணிக நிர்வாகிகளும் திரண்டிருந்த வேளையில் திங்கட்கிழமை (15) இரவு இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது.

Art Gallery of Ontario (AGO) முன்பாக நடைபெற்ற இந்த பிரம்மாண்ட போராட்டத்தைத் தொடர்ந்து இரண்டு பெண்கள் மீது காவல்துறையினர் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்தனர்.

1,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் AGO முன்பாக கலகத் தடுப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் திட்டமிட்டுச் சாலை மறியலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதுடன், அவசர காலப்பிரிவு காவல் அதிகாரிகள், அவசர மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்தப் போராட்டங்களில் காவல்துறையினரின் எச்சரிக்கைகளையும் மீறி செயல்பட்டதாக இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைதானவர்கள் 44 வயதான Shelly Agius, 49 வயதான Lily Phan என அடையாளம் காணப்பட்டனர்.

சாலையை விட்டு விலகிச் செல்லுமாறு காவல்துறை விடுத்த நேரடி உத்தரவுகளைப் புறக்கணித்ததற்காக Shelly Agius முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார்.

சக போராட்டக்காரரின் கைதை சட்டவிரோதமாக தடுக்க முயன்றதுடன், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் Lily Phan கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவருக்கும் எதிராக பல குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில சட்டப்பூர்வ நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

December மாதம் 11-ஆம் திகதி நடைபெறவுள்ள முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின் போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமாக நிரூபணத்திற்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் பொருளாதார கொள்கைகளை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவித்த எதிர்ப்பாளர்கள், முதலில் Toronto மாநகர சபை அமைந்துள்ள Nathan Phillips சதுக்கத்தில் திரண்டனர்.

அங்கிருந்து நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்து முழக்கமிட்டபடி கலைக்கூடம் நோக்கி பேரணியாக முன்னேறினர்.

இது போன்ற போராட்டங்கள் இரண்டாவது நாளாகவும்  தீவிரமடைந்து வருகிறது.

Related posts

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

Lankathas Pathmanathan

மாகாணங்களுக்கு $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டம்!

Lankathas Pathmanathan

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment