தேசியம்
செய்திகள்

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

21 பேர் கொல்லப்பட்ட Texas ஆரம்ப பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த அதிர்ச்சியில் அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அஞ்சலியை பிரதமர் புதன்கிழமை (25) தெரிவித்தார்.
இந்த கற்பனைக்கு எட்டாத நிகழ்வால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், முழு சமூகத்தினரின் வாழ்க்கையும் என்றென்றும் மாறிவிட்டது என Vancouverரில் செய்தியாளர்களிடம் Trudeau கூறினார்.
இந்த சம்பவத்தால் பலரை போல் தானும் மனம் உடைந்துள்ளதாக புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார்.
இந்த அவலங்கள் இங்கும் நடக்கலாம் என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார்.

Related posts

Liberal தலைமை போட்டியில் இருந்து விலகிய வேட்பாளர்

Lankathas Pathmanathan

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

Leave a Comment