தேசியம்
செய்திகள்

மாகாணங்களுக்கு $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டம்!

மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்தார்.

இந்த திட்டத்தில் $46 பில்லியன் புதிய நிதி உதவியும் அடங்குகிறது.

சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் Trudeauவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் மாகாணங்கள், பிரதேசங்களுக்கு சுகாதார நிதியுதவியை அடுத்த 10 ஆண்டுகளில் $196.1 பில்லியனாக அதிகரிக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

கனடாவின் சிதைந்து வரும் சுகாதாரப் பாதுகாப்புக்கு $46.2 பில்லியன் புதிய நிதியுதவியுடன் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் இந்த முன்மொழிவை வழங்க இரண்டு மணிநேர கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

Related posts

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Lankathas Pathmanathan

Leave a Comment