கனடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த YouTube வலைப்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் Mark Carney-க்கு சமூக வலைத்தளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் இவர் கைதானார்.
Calgary நகரைச் சேர்ந்த YouTube வலை பதிவாளரை RCMP கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை (15) அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை RCMP வெளியிட்டது.
பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் 31 வயதான Jamie Dacosta கைது செய்யப்பட்டார்.
Calgary நகர காவல் துறையின் உதவியோடு கைதான இவர் மீது கனடியப் பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Alberta நீதிமன்றத்தில் நடைபெற உள்ள விசாரணைக்கு முன்னதாக அவர் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் YouTube தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு கொலை மிரட்டல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் RCMP-யின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழு (INSET) இந்த விசாரணையை ஆரம்பித்தது.
கைதானவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
