தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்கிறேன்: Mark Carney

தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக  தமிழ் கனடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

கனடியத் தமிழர் தேசிய அவைக்கு  (NCCT) எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

தமிழ் கனடியர்கள் தங்களுக்கு எதிரான இனப்படுகொலையால் சுமக்கும் வலி, இழப்பு மற்றும் அவலத்தையும் புரிந்து கொள்கிறேன் என பிரதமரின் கடிதம் குறிப்பிடுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து அண்மையில் முன்னெடுக்கப்பட்ட இனவெறி தாக்குதல் குறித்து பல கனடிய தமிழர் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

NCCT வெளியிட்ட இதுபோன்ற அறிக்கையின் பிரதி ஒன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமரின் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கிய கனடாவை ஆதரிக்கிறது என தனது கடிதத்தில் குறிப்பிட்ட Mark Carney,  அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அளித்து வரும் பங்களிப்புகளை எங்கள் அரசாங்கம் மதிக்கிறது எனவும் கூறினார்.

தமிழர்களுக்கு எதிரான  இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை நோக்கிய உண்மை மற்றும் நீதிக்கான அழுத்தத்திற்கு சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் Mark Carney தனது கடிதத்தில் உறுதியளித்தார்.

Related posts

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Lankathas Pathmanathan

பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடையும் கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் Mark Carney?

Lankathas Pathmanathan

Leave a Comment