குடியேற்றம் குறித்த ஆலோசனைகளை முன்னெடுக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த கோடை காலத்தில் குறிப்பிட்ட ஆலோசனைகள நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச மாணவர்கள் குறித்த எதிர்கால முடிவுகளை வழிநடத்த, குடியேற்ற இலக்குகள் குறித்த இந்த ஆலோசனையை மத்திய அரசு பயன்படுத்தும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைகள் மாகாணங்கள், பல்கலைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது .
கடந்த ஆண்டு அரசாங்கம் மாணவர் அனுமதி விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, மாணவர் அனுமதி எண்ணிக்கையில் படிப்படியாகக் குறைப்பையும் அறிவித்தது.
கடந்த தசாப்தத்தில் கனடாவில் வழங்கப்பட்ட மாணவர் அனுமதிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
2015-இல் 219,000 மாணவர் அனுமதி வழங்கப்பட்டது, 2023-இல் அது 681,000 ஆக அதிகரித்தது.
2024-ஆம் ஆண்டில் 485,000 மாணவர் அனுமதிகள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனாலும் IRCC தரவுகளின்படி 2024-இல் 516,000-க்கும் மேற்பட்ட மாணவர் அனுமதிகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு, 437,000 மாணவர் அனுமதிகள் வழங்க இலக்கு வைக்கப்பட்டது.
முதல் காலாண்டில் 96,000-க்கும் மேற்பட்ட அனுமதிக்கள் வழங்கப்பட்டன.
கனடா திரும்பும் மாணவர்களிடையே வேலையற்றோர் விகிதம் May மாதத்தில் 20 சதவீதத்தை எட்டியதாக புள்ளிவிபரத் திணைக்கள தகவல் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமாகும்.