கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இந்த அறிவித்தலை வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டார்.
கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் தனது குழு முடித்துக் கொள்கிறது எனவும் அவர் கூறினார்.
இந்த முடிவு “உடனடியாக அமலுக்கு வருகிறது” எனவும் சமூக வலைதள பதிவொன்றில் Donald Trump குறிப்பிட்டார்.
கனடா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான Digital சேவை வரியை அறிவித்தது தனது இந்த முடிவுக்கான காரணம் என அவர் தெரிவித்தார்.
பல மாதங்களாக வர்த்தகப் போரில் முட்டுக்கட்டையாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்த அறிவிப்பு ஒரு திருப்புமுனையாகும்.
அண்மைய காலத்தில் இரு நாடுகளும் ஒவ்வொன்றின் மீது வரிகளை விதித்துள்ளன.
இருந்த போதிலும் ஒரு ஒப்பந்தம் ஏற்படக்கூடியது குறித்த நம்பிக்கையை இரு தரப்பினரும் அண்மைய வாரங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்காக கனடா செலுத்த வேண்டிய வரியை அடுத்த ஏழு நாட்களுக்குள் அறிவிப்போம் என தனது பதிவில் Donald Trump குறிப்பிட்டுள்ளார்.