பொது நிகழ்வுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொது விழாக்களில் கைத்தொலைபேசிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
May மற்றும் June மாதங்களில் பொது விழாக்களுக்காக மக்கள் கூடிய இடங்களில் இந்த திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நிகழ்வுகளில் இந்த திருட்டுகள் நிகழ்ந்தது என்பதை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நெரிசலான பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் திட்டமிடுபவர்கள், தங்கள் உடமைகளில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
இதுபோன்ற திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.