கனடிய பிரதமரும் உக்ரைன் ஜனாதிபதியும் பல முக்கிய ஒப்பந்தங்களில் வியாழக்கிழமை (10) கையெழுத்திட்டனர்.
100 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க கூட்டுறவு பிரகடனம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கனடாவிற்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, Alberta மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த 100 ஆண்டுகால ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு ‘விரிவான மூலோபாய கூட்டாண்மையாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடிய இராணுவத்திற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலட்சக் கணக்கான drone-களைத் தயாரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களை குறைந்த செலவில் எதிர்கொள்ளும் உக்ரைனின் திட்டத்திற்கு உபகரணங்களை வழங்கி உதவ கனடா ஒப்புக் கொண்டுள்ளது.
