தேசியம்
செய்திகள்

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

இரண்டாவது COVID தடுப்பூசிகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கனடாவில் தோன்றியுள்ளன.

கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்தடையும் நிலையில் இந்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு விரைவில் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து கனேடிய சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பல மாகாணங்கள் ஏற்கனவே அதிக ஆபத்துள்ள குழுக்களை மையமாகக் கொண்டு இரண்டாவது தடுப்பூசி வழங்கலுக்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளன. Ontario, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உயர் ஆபத்துள்ள குழுக்களில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இடைவெளிகளை இந்த வாரம் குறைத்தது. Quebec ம் இதுபோன்ற ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது.

Manitobaவில், குறிப்பிட்ட பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது. Manitoba அனைத்து இரண்டாவது தடுப்பூசிகளையும் July மாத இறுதிக்குள் வழங்க எதிர்பார்க்கிறது.

Related posts

கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி விபத்தில் மரணம்

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment