September 7, 2026
தேசியம்
செய்திகள்

வரலாறு காணாத வெப்பம்: கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் இருக்காது?

கனடாவின் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் வெதுவெதுப்பாக மாறும் என எதிர்வு கூறப்படுகிறது.

Pacific பெருங் கடலில் உருவாகியுள்ள வரலாறு காணாத தட்பவெப்ப நிலை மாற்றக் காரணியான Supercharged El Niño தீவிரமடைந்து வருவதால், இந்த ஆண்டு கனடாவின் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் வெதுவெதுப்பாக மாறும் என முன்னணி காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டு உருவாகியுள்ள El Niño காலநிலை மாற்றம், வரலாற்றிலேயே மிக வலுவான ஒன்றாக மாறக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனால் வரும் மாதங்களில் உலகம் முழுவதும் கடுமையான வெப்ப அலைகள், தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது கனடாவின் குளிர் காலத்தில் எதிரொலிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

கனடாவில் இந்த ஆண்டு பனிப்பொழிவு பெருமளவில் குறைந்து, குளிர்காலம் மிகவும் மிதமான வெப்பநிலையுடன் காணப்பட வாய்ப்புள்ளது.

இந்த மிதமான குளிர்காலம் வறட்சி, சுற்றுச்சூழல் கவலைகளை ஏற்படுத்துகிறது.

பனிப்பொழிவு குறைவதால் அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறை, வறட்சி. காட்டுத்தீ போன்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் மிக மோசமாக அதிகரிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு கனடாவில் தற்காலிக வதிவிட உரிமை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment