September 29, 2026
தேசியம்
செய்திகள்

சர்வதேச மேடையில் தமிழ்: TIFF விழாவில் தமிழ் திரைப்படங்கள்

Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF) இந்த வாரம் ஆரம்பமாகிறது.

உலகப் புகழ்பெற்ற 51-வது Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF 2026) September 10 ஆரம்பமாகி 20 வரை நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களும், தமிழுடன் தொடர்புடைய பழமொழி இந்தியத் திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையிடப்படுகின்றன.

இம்முறை திரையிடப்படும் முக்கியமான தமிழ்த் திரைப்படங்கள், தமிழ் உட்பட பல மொழிகளில் உருவான இந்தியத் திரைப்படத் தேர்வுகளில் டோரதி, Half ஆகியன உள்ளடங்குகின்றன.

இந்தத் திரைப்பட விழாவிற்காக Toronto நகரின் முக்கிய சாலைகள் பல மூடப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை (08) முதல் Toronto நகரின் மையப்பகுதியில் உள்ள பல முக்கிய சாலைகள் திரைப்பட விழாவிற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்களுக்காக முழுமையாக மூடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை மூடல்கள் காரணமாக பொதுப் போக்குவரத்தில் (TTC) மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவை காண பல்லாயிரக்கணக்கானவர்கள் Toronto-வில் குவிய ஆரம்பிக்கும் நிலையில் Downtown பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என மாநகராட்சியும் போக்குவரத்துத் துறையும் எச்சரிக்கிறது.

Related posts

Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்

Lankathas Pathmanathan

Alberta மாகாணத்தை கனடாவிலிருந்து விலக்குவதற்கான மனுவில் கையெழுத்திடவில்லை: Danielle Smith

Lankathas Pathmanathan

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment