தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கனேடிய அரசு கோவிட்-19 உலகத் தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்தே முதியோருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. பொருட்கள் சேவைகள் வரி (GST) மீளளிப்பு மூலம் ஏப்ரலில் ஒரு முறை சிறப்புக் கொடுப்பனவாக 1.3 பில்லியன் டொலர் வழங்கப்பட்டது. நான்கு மில்லியனுக்கும் அதிகமான முதியோர் இந்த உதவி மூலம் பயன் பெற்றார்கள். தனித்து வாழும் முதியோருக்குச் சராசரியாக 375 டொலரும், தம்பதிகளான முதியோருக்குச் சராசரியாக 510 டொலரும் இதன் மூலம் வழங்கப்பட்டது. பலசரக்குப் பொருட்களையும், மருந்துகளையும் விநியோகிப்பது போன்ற, கனேடிய முதியோருக்கு நடைமுறையில் தேவைப்படும் உதவிகளை வழங்கும் சமூக அமைப்புக்களுக்கும் கனேடிய அரசு உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் கனேடிய முதியோருக்கு உதவியையும், அதிக நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று மேலதிக நடவடிக்கைகளை அறிவித்தார்.இவற்றில் பின்வருவனவும் அடங்குகின்றன:

  • முதுமைக் கால பாதுகாப்புக் கொடுப்பனவு (Old Age Security (OAS)) ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியுள்ள முதியோருக்கு வரி விலக்குள்ள ஒரு முறை கொடுப்பனவாக 300 டொலரையும், வருமானத்திற்கு மேலதிகமான உறுதிக் கொடுப்பனவுக்குத் (Guaranteed Income Supplement (GIS)) தகுதி பெறும் முதியோருக்கு மேலதிகமாக 200 டொலரையும் வழங்குவதற்கு மேலதிகமாக 2.5 பில்லியன் டொலர் பணத்தைச் செலவிடும். இதன் மூலம், OAS மற்றும் GIS ஆகிய இரண்டையும் பெறத் தகுதியுள்ள தனி நபர்களுக்கு 500 டொலர் வழங்கப்படுவதுடன், கோவிட்-19 காரணமாக ஏற்படும் மேலதிக செலவினங்களை ஈடு செய்ய உதவியாகவும் இருக்கும்.
  • தனிமையைக் குறைக்கும் சமூகம் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்தும், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் சமூக ஆதரவு வலையமைப்பைப் பேணுவதற்கு அவர்களுக்கு உதவியளிக்கும் அமைப்புக்களுக்கு ஆதரவாக New Horizons for Seniors Program திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர் முதலிடப்படும்.
  • முதியோரின் 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்படா விட்டால், GIS மற்றும் Allowance கொடுப்பனவுகள் தற்காலிகமாக நீடிக்கப்படும். மிகவும் நலிவடைந்த முதியோர், அவர்களுக்கு உதவி அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து பெறுவதை இது உறுதிப்படுத்தும், கொடுப்பனவுகள் தடைப்படுவதைத் தவிர்ப்பதற்காக முதியோர் அவர்களது 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்களை இயலுமான விரைவிலும், 2020 ஒக்ரோபர் முதலாந் திகதிக்கு முன்பாகவும் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரப்படுகிறார்கள்.

கனேடிய அரசு கோவிட்-19 இன் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார பாதிப்புக்களைத் தொடர்ந்து கண்காணித்துப் பதில் நடவடிக்கை எடுப்பதுடன், முதியோர் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கிறது.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 12th 

Since the start of the COVID-19 pandemic, the Government of Canada has introduced measures to support seniors. In April, $1.3 billion was invested in a one-time special payment through the Goods and Services Tax (GST) credit. More than 4 million seniors benefited from this top-up, which gave an average of $375 for single seniors and $510 for senior couples. The government has also invested in community organizations that provide practical services to Canadian seniors, including the delivery of groceries and medications.

The Prime Minister, Justin Trudeau, today announced a series of additional measures to help Canadian seniors and provide them with greater financial security in this time of crisis. These measures include:

  • Providing additional financial support of $2.5 billion for a one-time tax-free payment of $300 for seniors eligible for the Old Age Security (OAS) pension, with an additional $200 for seniors eligible for the Guaranteed Income Supplement (GIS). This measure would give a total of $500 to individuals who are eligible to receive both the OAS and the GIS, and will help them cover increased costs caused by COVID-19.
  • Expanding the New Horizons for Seniors Program with an additional investment of $20 million to support organizations that offer community-based projects that reduce isolation, improve the quality of life of seniors, and help them maintain a social support network.
  • Temporarily extending GIS and Allowance payments if seniors’ 2019 income information has not been assessed. This will ensure that the most vulnerable seniors continue to receive their benefits when they need them the most. To avoid an interruption in benefits, seniors are encouraged to submit their 2019 income information as soon as possible and no later than by October 1, 2020.

The Government of Canada will continue to monitor and respond to the health, social, and economic impacts of COVID-19 and stand ready to take additional actions as needed to support all Canadians, including seniors, and stabilize the economy.

Related posts

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!