தேசியம்
செய்திகள்

Toronto பொது போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத சவால்களை அடுத்த மாதம் எதிர்கொள்ளும்?

Toronto பொது போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத சவால்களை அடுத்த மாதம் எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது.

இதில் சில போட்டிகள் Toronto-வில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன் போது Toronto-வின் பொது போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

உலகக் கோப்பை தொடர் ஆட்டங்களின் போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

போட்டிகள் நடைபெறும் நாட்களில் கூடுதலாக 44,000 பயணிகள் பொதுப் போக்குவரத்தை உபயோகிப்பார்கள் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

இந்த அதிகரிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், புகையிரதங்கள், பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க TTC, Metrolinx ஆகியன முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் தமது போக்குவரத்துத் திட்டங்களின் நோக்கம், Toronto நகரம் இரசிகர்களுக்கும் இங்கு வசிக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதே ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்,

Related posts

கனடாவின் 4 பிரதான சர்வதேச விமான நிலையங்களில் தனியார் முதலீடு?

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

மருத்துவமனைகளின் கொடூரமான நிலையை பார்வையிடுங்கள்: Alberta முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அழைப்பு!

Gaya Raja

Leave a Comment