தேசியம்
செய்திகள்

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனுக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகஜமுகன்  செல்லையா என்ற கனேடியருக்கு திங்கட்கிழமை Floridaவில் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வதேச மனித கடத்தல் வளையத்தில் அவரது பங்கிற்காக, அமெரிக்க நீதித்துறை இன்று இந்த தண்டனையை அறிவித்தது.

நிதி ஆதாயத்திற்காக இலங்கையில் இருந்து ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோரை கரீபியன் வழியாக அமெரிக்காவுக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அவர் கடந்த February மாதம் 24ஆம் திகதி தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2003 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மனித கடத்தல் தொடர்பான குற்றங்களுக்கு அவர் முன்னர் தண்டனை பெற்றிருந்தார்.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan

Leave a Comment