September 27, 2026
தேசியம்
செய்திகள்

உண்மையை வெளிக்கொணர்வது பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் முக்கிய குறிக்கோள்

உண்மையை வெளிக்கொணர்வது ஒரு முக்கியமான குறிக்கோள் என வியாழக்கிழமை (13) ஆரம்பமான பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் ஆரம்ப உரையில் Ontario மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Paul Rouleau கூறினார்.

கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை உபயோகித்தது குறித்த ஆணையத்தின் பொது விசாரணை வியாழனன்று ஆரம்பமானது.

இறுக்கமான காலக்கெடுவை கொண்டுள்ள இந்த விசாரணையில் கனடியர்களை அறிவூட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு நீதிபதி வலியுறுத்தினார்.

பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் ஆறு வாரகால பொது விசாரணை ஆரம்பமானது

1988 இல் சட்டமாக மாறிய பின்னர் முதல் முறையாக அவசர காலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை February 14ஆம் திகதி பிரதமர் Justin Trudeau எடுத்தார்.

பிரதமர் Trudeau, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair உட்பட 7 அமைச்சர்களும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் இந்த விசாரணையில் சாட்சியமளிக்க உள்ளனர்.

தவிரவும் RCMP ஆணையர் Brenda Lucki, Ottawa நகர முதல்வர் Jim Watson, Coutts – Alberta, Windsor – Ontario ஆகிய நகர முதல்வர்கள், முன்னாள் Ottawa காவல்துறை தலைவர் Peter Sloly ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.

அவசர காலச் சட்ட பயன்பாட்டின் அவசியத்தை Trudeau தொடர்ந்தும் நியாயப்படுத்துகின்றார்.

ஆனாலும் இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நியாயத்தன்மையை தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கவுள்ளதாக கனடிய சிவில் சுதந்திரத்திற்கான சங்கம் உறுதியளிக்கிறது.

Related posts

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan

Leave a Comment