Ontario ஆசிரியர்கள் புதிய ஒப்பந்தங்கள் இன்றி வகுப்பறைக்குத் திரும்புகின்றனர்.
Ontario-வில் உள்ள சுமார் 255,000 ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் கூட்டு ஒப்பந்தங்கள் கடந்த August 31, 2026 அன்றுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தன.
மாகாண அரசுக்கும் முக்கிய ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடங்கி உள்ளதால், புதிய ஒப்பந்தங்கள் ஏதுமின்றி ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு திரும்புகின்றனர்.
மாகாணம் முழுவதும் பாடசாலைகள் திட்டமிட்டபடி ஆரம்பித்தாலும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இந்த கல்வியாண்டின் பிற்பகுதியில் பணிநிறுத்தம் போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட கூடும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
காலாவதியான ஒப்பந்தங்களின் விதிகளின் கீழ் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினாலும், மோசமடைந்து வரும் வகுப்பறை சூழல் குறித்து அவர்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
கடந்த வார இறுதியில், Ontario மாகாணம் முழுவதும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.
