கனடிய வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ‘கனடா முதலீட்டு மாநாட்டை’ (Canada Investment Summit) பிரதமர் Mark Carney நடத்தவுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் $1 டிரில்லியன் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பது இம்மாநாட்டின் முக்கிய இலக்காக உள்ளது.
கனடாவின் உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்தவும், அடுத்த 5 ஆண்டுகளில் அத்துறைகளில் பிரம்மாண்ட மூலதனத்தை ஈர்க்கவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் இம் மாநாட்டில் பங்கேற்க கனடாவுக்கு வரவுள்ளனர்.
அவர்களிடம் கனடாவின் முக்கிய பெருந் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டு, முதலீடுகள் கோரப்படவுள்ளன.
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச முதலீட்டாளர்களை கனடாவின் பக்கம் ஈர்ப்பது பிரதமர் Mark Carney-க்கு ஒரு இமாலயச் சவாலாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், சர்வதேச அரங்கில் கனடாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், தற்சார்பை வளர்க்கவும் Mark Carney எடுத்துள்ள இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மாநாடு Toronto-வில் September 14,15-ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
