September 4, 2026
தேசியம்
செய்திகள்

4.7 பில்லியன் செலவில் கனடாவிலேயே தயாராகிறது VIA Rail

40 ஆண்டுகளில் முதல்முறையாக $4.7 பில்லியன் செலவில் VIA Rail பெட்டிகள் கனடாவிலேயே தயாராகின்றன.

பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், வரி விதிப்பு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது.

கனடிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இது நோக்கப்படுகிறது.

$4.7 பில்லியன் செலவில் 313 புதிய VIA Rail பயணிகள் பெட்டிகளை கனடாவில் தயாரித்துப் பராமரிக்கப் போவதாக Mark Carney அறிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில், இந்த பெட்டிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாமல் முற்றிலும் கனடாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும்.

Ontario மாகாணத்தின் Thunder Bay நகரில் உள்ள Alstom தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன.

இந்தத் தயாரிப்பில் கனடா நாட்டு எஃகு அதிக அளவில் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் Ontario, Quebec மாகாணங்களில் நேரடியாக 700-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிந்ததை  தொடர்ந்து, அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“கனடாவை பிரிக்கவும் பலவீனப்படுத்தவும் அமெரிக்கா முயல்கிறது  என கூறிய Mark Carney, கனடியர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள் என தெரிவித்தார்.

Related posts

கனடிய செய்திகள் – November மாதம் 02 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கனடிய பிரதமர் கண்டனம்!

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment