தேசியம்
செய்திகள்

Ontario இடைத்தேர்தல்: தத்தம் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்ட PC, NDP கட்சிகள்!

Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற மூன்று முக்கிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இதில் மாகாண முதல்வர் Doug Ford தலைமையிலான Progressive Conservative (PC) கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு சொந்தமான தொகுதிகளை மீண்டும் வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளன.

Ontario மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழன் நடைபெற்றது.

Hamilton-Stoney Creek, Scarborough Southwest, York-Simcoe ஆகிய தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

Hamilton East–Stoney Creek தொகுதியில் PC கட்சியின் வேட்பாளர் Jeff Beattie வெற்றி பெற்றார்.

இதன் மூலம் PC இத்தொகுதியை தன்வசமே வைத்துள்ளது.

PC கட்சியைச் சேர்ந்த Neil Lumsden அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, Hamilton-Stoney Creek தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

Jeff Beattie 38.87 சதவீத வாக்குகளைப் பெற்று, 1,614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றார்.

அங்கு வாக்காளர் பங்கேற்பு 29.25 சதவீதமாக இருந்தது என் Elections Ontario தெரிவித்துள்ளது.

Scarborough Southwest தொகுதியில் NDP வேட்பாளர் Fatima Shaban பெரு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் NDP, Liberal ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் NDP அங்கு மீண்டும் வெற்றி பெற்றது.

Fatima Shaban 40.47 சதவீத வாக்குகளைப் பெற்று, 2,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அங்கு வாக்காளர் பங்கேற்பு 26.5 சதவீதமாக இருந்தது என் Elections Ontario தெரிவித்துள்ளது.

NDP மாகாணசபை உறுப்பினர் Doly Begum, அதே தொகுதியில் மத்திய Liberal கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதால், Scarborough Southwest  தொகுதி வெற்றிடமானது.

York-Simcoe தொகுதியில் PC கட்சியின் மற்றொரு வேட்பாளர் Susan Lahey வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்தத் தொகுதியில் PC கட்சி  மீண்டும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

அமைச்சர் Caroline Mulroney பதவி விலகியதை தொடர்ந்து, PC கட்சி இந்தத் தொகுதியை மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

Elections Ontario அதிகாரப்பூர்வமற்ற இடைத் தேர்தல் முடிவுகளின்படி, மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு 25 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருந்தது.

Related posts

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

Lankathas Pathmanathan

அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: பிரதமர்

Lankathas Pathmanathan

சிறந்த நாடுகளின் பட்டியலில் கனடா பின்னடைவு?

Lankathas Pathmanathan

Leave a Comment