தேசியம்
செய்திகள்

நேபாள வெள்ளம்: காணாமல் போன 29 கனடியர்களை தேடும் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் 29 கனடியர்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது.

நேபாளம், திபெத் பகுதியில் காணாமல் போன 29 கனடா குடிமக்கள், நிரந்தரக் குடியுரிமையாளர்கள் நிலை குறித்து கனடிய வெளியுறவுத்துறை  கவலை வெளியிட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கனடா குடிமகன் ஒருவர் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு அவசர நிவாரணப் பணிகளுக்காக கனடிய அரசு சுமார் 5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

கடந்த 26 -ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் இதுவரை குறைந்தது 1,204 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4,200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க காவலில் கனடியர் மரணம்!

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

Leave a Comment