G7 , G20 ஆகிய சர்வதேச அமைப்புகளில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது “சரியான காரணங்களுக்காகவே” என கனடிய பிரதமர் Mark Carney திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய அதிகாரிகளை மீண்டும் இந்த சர்வதேச அமைப்புகளுக்கு வரவேற்பது குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
இந்த ஆண்டு நடைபெறும் G20 தலைவர்கள் மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin கலந்து கொண்டால், அவரிடம் “உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்” என்ற ஒற்றைச் செய்தியை கூறப்போவதாக Mark Carney குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-இல் கிரிமியா மீது ரஷ்யா நடத்திய அத்துமீறிய தாக்குதலால் தான் G7 அமைப்பில் இருந்தும், பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது தொடுத்த முழுமையான போரினால் தான் G20 அமைப்பில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கனடா எப்போதும் உக்ரைன் நாட்டின் பக்கமே உறுதியாக நிற்கிறது எனவும் அவர் கூறினார்.
