கனடாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்க ஜனாதிபதியை குடியரசுக் கட்சியினர் ஆதரிக்கின்றனர்.
கனடாவுடனான வர்த்தகப் போரில் குடியரசுக் கட்சியினரின் பகிரங்கமாக ஆதரவை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பெற்றுள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியை சந்தித்த குடியரசுக் கட்சி சட்டமியற்றுநர்கள் வர்த்தக போரில் ஜனாதிபதியின் உத்திகளை ஆதரித்தனர்.
மேலும், பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியதற்காக பிரதமர் Mark Carney அரசாங்கத்தை அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுங்கவரிகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பாளரான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer-ருடன் மூடிய அறைக்குள் நடைபெற்ற கூட்டத்தில், குடியரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை (02) பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய குடியரசுக் கட்சியினர், பொதுவாக ஜனாதிபதியின் வர்த்தக உத்திக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்புகள் அமெரிக்காவின் வரிகள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் கூறினாலும், குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், கனடாவுடனான வர்த்தகப் போரை ஆதரிக்கின்றனர்.
ஆனாலும் சுங்க வரிகளின் அதிகரிப்பு, November மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தங்களின் மறுதேர்தல் வாய்ப்புகளை பாதிக்கும் என சில குடியரசுக் கட்சியினர் மறைமுகமாகக் கவலை தெரிவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
