September 3, 2026
தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: கனடிய மத்திய வங்கி அதிரடி முடிவு! 

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் 2.25 சதவீதத்தில் தக்க வைத்துள்ளது.
மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதத்தில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளது.
தொடர்ந்து ஏழாவது முறையாக தனது வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிவித்த புதன்கிழமை (02) வெளியானது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், அமெரிக்க வர்த்தகப் பதற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் இந்த முடிவை முன்னர் எதிர்பார்த்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடிய வங்கி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது.
ஈரானில் ஏற்பட்ட போரின் காரணமாக எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை நிலவியதை தொடர்ந்து, July மாதத்தில் பணவீக்கம் மூன்று சதவீதமாக அதிகரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

Gaya Raja

போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும்: Ottawa காவல்துறை தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment