நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமர் Mark Carney-க்கு Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அழைப்பு விடுத்துள்ளார்.
“நாம் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என இந்த விடயம் குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் Pierre Poilievre குறிப்பிட்டார்.
Donald Trump அறிவித்துள்ள 50 சதவீத புதிய சுங்கவரிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இதனால் சுமார் 87,000 கனடியர்கள் வேலைகளை இழக்கும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு விவரங்களை வெளியிடுமாறு Conservative கட்சி கூறிவரும் நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
கனடா, ‘உண்மையில் ஒரு அமெரிக்க மாநிலமாக இல்லாமல்’, அதன் ‘நன்மைகளை’ பெற விரும்புகிறது என அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை “அனைத்து வாகனங்கள் மீதான” வரிகளை அதிகரிக்க போவதாகவும் Donald Trump அறிவித்தார்.
கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததன் தாக்கத்தை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer குறைத்து மதிப்பிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
