September 18, 2024
தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கம் வென்றது

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா  நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.
இவற்றில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது.

பெண்களுக்கான 100 மீட்டர் Butterfly நீச்சல் போட்டியில் கனடியரான Margaret Mac Neil திங்கட்கிழமை தங்கப் பதக்கத்தை வெற்றி  பெற்றார்.

சனிக்கிழமை கனடாவின் நால்வர் அடங்கிய பெண்கள் நீச்சல் அணி, இந்த ஒலிம்பிக் போட்டியின் முதலாவது கனடிய பதக்கத்தை வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை கனடா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை பெற்றிபெற்றது இரண்டு வாரங்கள் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக கனடா 371 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளது.

Related posts

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

Gaya Raja

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த மத்திய வங்கியின் வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment