அமெரிக்காவுடனான ‘மோசமான ஒப்பந்தத்தைக்’ கைவிடும் கனடிய பிரதமரின் முடிவை கனடிய மாகாண முதல்வர்கள் ஆதரிப்பதாக தெரிகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்ளும் பிரதமர் Mark Carney-யின் முடிவுக்கு, கனடாவின் மாகாண முதல்வர்கள் ஆதரவு திரட்டுவதாக தெரிகிறது.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இழந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் முடங்கின.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது.
கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா சனிக்கிழமை 50 சதவீத வரியை விதித்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அடுத்த மாதம் பதில் நடவடிக்கை எடுக்க கனடா உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில் கைவிட்ட ஒப்பந்தம், சுங்கவரி சலுகை ஆகியவை குறித்து கனடாவின் மாகாண முதல்வர்களுக்கு Mark Carney சனிக்கிழமை (22) விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Ontario முதல்வர் Doug Ford, “வரிக்கு வரி என்ற அடிப்படையில் நாம் இதை எதிர்கொள்ள வேண்டும்” என கூறினார்.
அமெரிக்கா விவகாரத்தில் கனடா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை Manitoba மாகாண முதல்வர் Wab Kinew ஒப்புக் கொண்டார்.
பிரதமருக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்த Nova Scotia முதல்வர் Tim Houston, அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
New Brunswick, British Columbia, Saskatchewan ஆகிய மாகாணங்களின் முதல்வர்களும் பிரதமருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
பிரதமருக்கு உறுதியான ஆதரவு தெரிவிப்பதாக British Columbia முதல்வர் David Eby கூறினார்.
