நகரசபை தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு
இன்னும் சில நாட்களே உள்ளன.
Ontario-வில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் (21) நிறைவுக்கு வருகிறது.
October 26-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் நகர முதல்வர், நகரசபை உறுப்பினர், அல்லது பாடசாலை அறங்காவலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், August 21-ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.
Ontario-வில் உள்ள அனைத்து 444 நகராட்சிகளிலும் இந்தத் தேர்தல்கள் நடைபெறும்.
வேட்பாளர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு தேர்தலில் இருந்து விலகுவதற்கான இறுதி நாளும் August 21 ஆகும்.
