கனடா மீது அமெரிக்காவின் கடுமையான புதிய சுங்கவரிகள் புதன்கிழமை (19) நள்ளிரவுக்கு பின்னர் அமுலுக்கு வரவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, $20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், August 19 அன்று நள்ளிரவுக்கு பின்னர் அந்த வரிகள் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவு சுங்கவரி காலக்கெடுவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசியில் உரையாடினர்.
கனடிய பிரதமர் அலுவலகம் இந்த தொலைபேசி உரையாடலை உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து Mark Carney-யும் Donald Trump-பும் உரையாடியதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
அந்த உரையாடல் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களில் இரு நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
