York பிராந்திய கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான கரிஷன் ரவிசங்கர் போட்டியிடுகிறார்.
York பிராந்தியத்தின் 5&7 வட்டார கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு கரிஷன் ரவிசங்கர் போட்டியிடுகிறார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
கல்விச் சபை உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் Ontario மாகாணத்தில் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.
இதில் York பிராந்தியத்தின் கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு கரிஷன் ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலாவது தமிழர் இவராவார்.
இதுவரை இந்தத் தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தப் பதவியில் Michael Chen இப்போது உள்ளார்.
அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
