தேசியம்
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த தெரிவு குறித்து நிமால் விநாயகமூர்த்தி சிவஞானம் சிறீதரனுக்கு வியாழக்கிழமை  (25) கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவு முதற் தடவையாக மக்களாட்சி முறைத்  தேர்வு மூலம் நிகழ்ந்தது ஜனநாயகம் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது என அந்த கடிதத்தில் நிமால் விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து ஈழத்தமிழர் உரிமைக்காக போராட காலம் உங்களுக்களித்த பொன்னான வாய்ப்பு இதுவாகும் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகிறது.

ஈழத்தமிழர் உரிமை மீட்பில் அனைத்து கட்சிகள், அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் தோள் கொடுக்கும் என்ற உறுதிப்பாட்டை நிமால் விநாயகமூர்த்தி தனது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரம் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளையும் எம்.ஏ. சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan

$6.5 மில்லியன் Cocaine கடத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Brampton நபர்

Lankathas Pathmanathan

COVID குறித்த உலக சுகாதார அமைப்பின் முடிவு கனடாவின் நடவடிக்கைகளை பாதிக்காது

Lankathas Pathmanathan

Leave a Comment