Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக நகர சபையிடமிருந்து பெறப்பட்ட நிலங்களைத் திருப்பித் தருமாறு மாகாண அரசை நகர முதல்வர் கோரினார்.
Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெறப்பட்ட நிலங்களின் ஒரு பகுதியின் மீதான கட்டுப்பாட்டை Ontario அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டத்தை இரத்து செய்யுமாறு Toronto நகர முதல்வர் Olivia Chow வலியுறுத்தி வருகிறார்.
Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் Steven MacKinnon அண்மையில் அறிவித்தார்.
110 சட்டமூலத்தை இரத்து செய்து, அந்த நிலத்தை நகரத்திடம் திருப்பித் தருமாறு மாகாண அரசை Olivia Chow தற்போது வலியுறுத்தி வருகிறார்.
இந்த விடயத்தை மாகாண அரசிடம் முறையிடும் வகையில் ஒரு அவசரத் தீர்மானத்தை Olivia Chow திங்கட்கிழமை (28) நகர சபையில் முன் வைத்தார்.
Billy Bishop விமான நிலைய விரிவுபடுத்தும் திட்டங்கள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டாலும் மாகாணம் இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என Ontario மாகாண போக்குவரத்து துறை அமைச்சர் Prabmeet Sarkaria கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
