September 29, 2026
தேசியம்
செய்திகள்

Gordie Howe பாலம் திறக்கப்பட்ட சில மணிநேரங்களில் எத்தனை வாகனங்கள் அதில் பயணித்தன?

Gordie Howe சர்வதேசப் பாலம் திறக்கப்பட்ட முதல் 12 மணி நேரத்தில் 7,500 வாகனங்கள் பயணம் மேற்கொண்டன.

Gordie Howe பாலம் திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, Ontario மாகாணத்தின் Windsor நகருக்கும் Michigan மாநிலத்தின் Detroit நகரங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் மேற்கொண்டன.

Gordie Howe சர்வதேசப் பாலம் திங்கட்கிழமை (27) அதிகாரப்பூர்வமாக வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

இத்திட்டத்தின் நிதிசார் அம்சங்கள் குறித்த பல மாத கால சர்ச்சைகளுக்கு பின்னர் பாலம் திறக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து இந்த பாலம் குறித்த பெரும் ஆர்வம் இருக்கும் en அதிகாரிகள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர்.

திங்களன்று அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த சர்வதேசப் பாலத்தைக் கடந்து சென்ற முதல் நபர்களாக Gordie Howe குடும்பத்தினர் இருந்தனர்.

பாதசாரிகளுக்கான பாதை August 5-ஆம் திகதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை விரிவுபடுத்தும் கனடிய அரசு

Lankathas Pathmanathan

அமெரிக்க அதிகாரிகள் வரம்புகளை மீறுவதாக Mark Carney குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடாவுக்குள் வர தடை !

Gaya Raja

Leave a Comment