September 20, 2026
தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கான Toronto நகரின் தொடர்ச்சியான ஆதரவு உத்தியோகபூர்வமாக வெளியாகிறது?

தமிழ்ச் சமூக மைய திட்டத்திற்கான Toronto நகரின் தொடர்ச்சியான ஆதரவு இந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகிறது.

தமிழர் சமூகத்தின் கனவுத் திட்டமான தமிழ்ச் சமூக மையம் தொடர்பான முக்கிய அறிவிப்பாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் Toronto நகர முதல்வர் Olivia Chow, தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, தமிழ்ச் சமூக மையக் காணி திட்டத்திற்கு Toronto நகரின் தொடர்ச்சியான ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

தமிழர் சமூகத்தின் வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வு அமையும் என தமிழ் சமூக மைய குழு அறிவித்துள்ளது.

தமிழ் சமூக மைய குழு Toronto நகர முதல்வர் Olivia Chow-வை இந்த மாத ஆரம்பத்தில் சந்தித்தது.

இந்த சந்திப்பில் தமிழ் சமூக மைய சமூக மைய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நகர முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதேவேளை தமிழ்ச் சமூக மைய திட்டத்தில் இரண்டு பிரதான அங்கீகாரங்களும் இந்த மாத ஆரம்பத்தில் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Gordie Howe மேம்பால திறப்பு தாமதம்?

Lankathas Pathmanathan

பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த Mark Carney – Donald Trump இணக்கம்?

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment