தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு அமெரிக்கா தேவை? – Donald Trump நம்பிக்கை

கனடாவுக்கு அமெரிக்கா தேவை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

அமெரிக்கா இல்லாமல் கனடாவால் நிலைத்திருக்க முடியாது என செவ்வாய்க்கிழமை (21) Oval அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய Donald Trump கூறினார்.

கனடாவுக்கு எதிரான தனது வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீது 50 சதவீத வரி விதிக்கும் மூன்று அறிவிப்பாணைகளில் Donald Trump திங்கட்கிழமை (20) கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் கனடா குறித்த இந்த புதிய கருத்து வெளியானது.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எதிராக கனடா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈடுசெய்ய இந்த வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer கூறியிருந்தார்.

கனடாவில் தொடரும் காட்டுத்தீ புகை தொடர்பாகவும் கனடாவை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் கடுமையாக சாடியிருந்தார்.

கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்காததற்கு நாங்கள் அவர்களை பொறுப்பாக்குகிறோம் என Donald Trump தனது கண்டனத்தை வெளியிட்டார்.

காட்டுத்தீ புகையினால் ஏற்படும் மாசுபாட்டிற்கான செலவை, கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளுடன் இணைக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் காட்டுத்தீப் புகையுடன், புதிதாக விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என செய்தியாளர்கள் அமெரிக்கா ஜனாதிபதியிடம் செவ்வாயன்று வினவினர்.

அதற்கு பதிலளித்த Donald Trump, “நாங்கள் அது குறித்து தனியாகப் பரிசீலித்து வருகிறோம்” என கூறினார்.

காட்டுத்தீ தொடர்பான இறக்குமதி வரிகள் குறித்து Donald Trump  “பல்வேறு வழிமுறைகளைக் கோரியுள்ளதாக” அவரது நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் Mark Carney கூறினார்

Related posts

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ஆழமாக உட்பொதிந்துள்ளன: CSIS

Lankathas Pathmanathan

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

Leave a Comment