Durham காவல்துறை பயிற்சி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
Ontario காவல் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (07) நிகழ்ந்த விபத்தில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
Durham பிராந்தியக் காவல்துறையைச் (DRPS) சேர்ந்த பயிற்சி காவலர் ஒருவர் வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்தார்; மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விபத்தின்போது அவர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக Ontario காவல் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்ததாகக் காவல்துறைத் தலைமை அதிகாரி Peter Moreira தெரிவித்தார்.
இதில் tractor-trailer வாகனத்தின் ஓட்டுநருக்கு காயங்கள் ஏதுமில்லை என Ontario மாகாண காவல்துறை (OPP) தெரிவித்தது.
