September 30, 2026
தேசியம்
செய்திகள்

உலக நாடுகளின் தலைவர்களை Mark Carney சந்திப்பு

NATO உச்சிமாநாட்டில் பங்கேற்க துருக்கி சென்றதை கனடிய பிரதமர், அங்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

துருக்கியின் தலைநகரில் நோர்வே பிரதமர், ஜேர்மன் ஜனாதிபதி ஆகியோரை கனடிய பிரதமர் சந்தித்தார்.

செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற NATO உச்சி மாநாட்டின் இடையே, Mark Carney இந்த சந்திப்பை முன்னெடுத்தார்.

நோர்வே, ஜேர்மன் கூட்டு முயற்சியுடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட மறுநாள் இந்த சந்திப்புகளை பிரதமர் முன்னெடுத்தார்.

இந்த ஆண்டு NATO உச்சிமாநாட்டை நடத்தும் துருக்கிய ஜனாதிபதியை பிரதமர் சந்தித்தார்.

உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy, டச்சுப் பிரதமர் Rob Jetten ஆகியோருடனும் இருதரப்பு சந்திப்புகளை Mark Carney நடத்தினார்.

தென் கொரிய ஜனாதிபதியையும் அவர் சந்தித்தார்.

திங்கட்கிழமை (06) துருக்கி பயணமான Mark Carney இரண்டு நாள் NATO உச்சி மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடானது.

இங்கு பாதுகாப்புத் துறைக்கான நிதி பங்களிப்பு குறித்த விவாதத்தில் Mark Carney பங்கேற்பார் என கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2015-ஆம் ஆண்டின் பின்னர் கனடிய பிரதமர் ஒருவர் துருக்கி பயணமாவது இது முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

Lankathas Pathmanathan

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment