September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து ஜெர்மன் தலைவர்கள் மகிழ்ச்சி

கனடாவுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஜெர்மன பொருளாதாரத்திற்கு சிறந்தது என தெரிவிக்கப்படுகிறது.

German Chancellor Friedrich Merz, நிதி அமைச்சர் Lars Klingbeil ஆகியோர் இந்த கருத்தை கூறினர்.

இது NATO அமைப்பின் இணைந்த பாதுகாப்பிற்கு சிறந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க கனடிய அரசாங்கம் இந்த வாரம் ஜேர்மனிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தச் செய்தியின் மூலம், NATO உச்சிமாநாட்டின் ஆரம்பித்திலேயே Atlantic கடலைக் கடந்த ஐரோப்பிய ஒத்துழைப்புக்கு ஆதரவான வலுவானதொரு செய்தியை நாங்கள் முன்வைப்போம் என Friedrich Merz நம்பிக்கை தெரிவித்தார்.

வட Atlantic பிராந்தியத்தில் கனடா ஜெர்மனி, நோர்வே ஆகிய நாடுகளை வரும் பல தசாப்தங்களுக்கு கூட்டாளிகளாக ஒன்றிணைக்க கூடிய ஒரு முக்கிய உத்திசார் முன்னெடுப்பு இதுவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஒப்பந்தம் வெறும் பொருளாதார ஒப்பந்தத்தையும் தாண்டிச் செல்வதாகவும், இது புவிசார் அரசியல் தாக்கங்களையும் கொண்டிருப்பதாகவும் Lars Klingbeil கூறினார்.

Related posts

மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்கள் துரிதப்படுத்துகிறது!

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும்:  துணைப் பிரதமர் Chrystia Freeland 

Gaya Raja

Leave a Comment