September 2, 2026
தேசியம்
செய்திகள்

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

COVID தொற்றின் அதிகரிப்பு குறித்து கண்காணித்து வருவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஆரம்ப அறிகுறிகள் தொற்று அதிகரித்து வருவதாக கூறும் நிலையில் புதிய சுகாதார அமைச்சர் Mark Holland இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் பொது சுகாதார முகமையின் சமீபத்திய தரவு நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

இந்த நிலை குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் ஒட்டுமொத்த COVID தொற்றின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்திய தரவுகள் குறித்து கவலையடையவில்லை என கனடாவின் துணைத் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo தெரிவித்தார்.

Related posts

Toronto நகர மையத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணி

Lankathas Pathmanathan

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment