அமெரிக்க சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், Royal கனடியன் விமானப்படையும் அமெரிக்க விமானப் படையும் கனடாவின் தலைநகர் வானில் இணைந்த அணிவகுப்பை நடத்தின.
சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டதன் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் இந்த அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது.
சனிக்கிழமை (04) மாலை இந்த வான்வழி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் அமெரிக்காவின் இரண்டு F-35 Lightning II jet விமானங்களுடன் இணைந்து கனடாவின் இரண்டு CF-18 Hornet விமானங்களும் ஈடுபட்டன.
தலைநகர் Ottawa-வில் Rockcliffe பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் வருடாந்த July 4 கொண்டாட்டத்தின் போது , அந்த விமான அணிவகுப்பு நிகழ்வு நடைபெறுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.
