November 16, 2025
தேசியம்
செய்திகள்

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை தவற விட்ட Trudeau!

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் பிரதமர் தவற விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான முதலாவது தேசிய நாளை குறிக்கும் நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்காததன் மூலம் Justin Trudeau அந்த வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரை உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளை குறிக்கும் நிகழ்வில் பங்கேற்க Kamloops, British Colombiaவில் உள்ள Tk’emlups te Secwepemc முதற்குடிகளின் தேசம் அழைப்பு விடுத்திருந்தது.

தமது இரண்டு அழைப்பு கடிதங்களுக்கு பதில் கூறாதது ஏற்கனவே பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு கூடுதல் அவமானமாக இருந்தது என புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் Tk’emlups te Secwepemc முதற்குடிகளின் தேசம் கூறியது.

ஆனால் இந்த மாத இறுதியில் Trudeauவை வரவேற்க காத்திருப்பதாகவும் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Trudeauவின் வருகை வதிவிட பாடசாலை அமைப்பில் உண்மையான மாற்றத்தை இயற்றுவதற்கும் வரலாற்றுத் தவறுகளை சரி செய்வதற்கு அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை உலகுக்குக் காட்டியிருக்கும் என இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த வியாழக்கிழமை உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில், அந்த நாளை குறிக்கும் நிகழ்வில் பங்கேற்காது பிரதமர் Trudeau தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட British Columbiaவுக்கு பயணிக்க முடிவு செய்த விடயம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் செய்தது ஒரு தவறு என பிரதமர் Trudeau செவ்வாய்கிழமை ஏற்றுக் கொண்டிருந்தார்.

Related posts

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

Lankathas Pathmanathan

Leave a Comment